பொது செய்தி

தமிழ்நாடு

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் : பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை

Added : ஜன 16, 2020
Share
Advertisement

கோத்தகிரி:'கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோத்தகிரி சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டம், சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்குள்ள, 21 வார்டுகளில் குப்பைகள் சேகரித்து தரம் பிரிக்கப்பட்ட, நான்கு டன் குப்பைகள் நாள்தோறும் வளம் மீட்பு பூங்காவில் கொட்டப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள், தரத்திற்கு ஏற்ப, விற்பனையும் செய்யப்படுகிறது. பேரூராட்சியில், பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.'பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருப்புவாசிகள் கூடுமானவரை, குப்பைகளை தரம் பிரித்து, துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும்,குடியிருப்புகள், கடைகள்,மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்தும் வெளியேறும் குப்பைகள் சாலைகள் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.இதனை தவிர்க்க, பொதுமக்கள் பேரூராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின் சம்பந்தப்பட்ட கடை மற்றும் குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, 1,000 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு, மணி கண்டன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X