முடிந்தது நெல் அறுவடை துவங்கியது காய்கறி விவசாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முடிந்தது நெல் அறுவடை துவங்கியது காய்கறி விவசாயம்

Added : ஜன 16, 2020
 முடிந்தது நெல் அறுவடை  துவங்கியது காய்கறி விவசாயம்

கூடலுார்:கூடலூரில், நெல் அறுவடை முடிந்ததைதொடர்ந்து, விவசாயிகள் காய்கறி விவசாயத்தைதுவங்கியுள்ளனர்.

கூடலூரில், வயல் நிலங்களில் விவசாயிகள், இருபோகம் நெல் விளைச்சல் மேற்கொள்ளப் படுகிறது. அப்போது, பாரம்பரிய ரகமான, 'கந்தகசாலா, பாரதி, ஜெயா, மரநெல்லு, மண்விளையான், தொண்டி ஆதிரா-1, ஆதிரா-2, முண்டமரநெல்லு, கோதண்டன், வரிசூரியன், முள்ளம்பூஞ்சான், உமா, கல்யாணி, காளியம்மா, குறுக்குஒட், சிந்தாமணி, கலவை, தாச்சிங், கொடவிளையான்' ஆகிய, 20க்கு மேற்பட்ட நெல் வகைகளை பயிரிட்டு வந்தனர்.

காலநிலை மாற்றம் காரணமாக, கோடையில் நீர்பாசனம் குறைந்ததால் பருவமழை காலத்தில் நெல்லும்; கோடையில் காய்கறி விவசாயத்துக்கும் மாறிவிட்டனர். தற்போது பாரதி, கந்தகசாலா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நெல் வகைகளை மட்டும் பயிரிட்டு வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக, பருவ மழை குறைந்ததால், நெல் விவசாயத்தின் பரப்பளவு, குறைந்தது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மட்டும் சரியான நேரத்தில் பருவமழை பெய்ததால், பல ஆண்டுகளுக்கு பின், விவசாயிகள் அதிக பரப்பளவில் நெல் விளைச்சல் மேற்கொண்டனர். எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்ததால், மகிழ்ச்சியுடன் கடந்த மாதம் நெல் அறுவடையை முடித்தனர்.தொடர்ந்து, தற்போது, கோடை காய்கறி விளைச்சல் துவங்கி உள்ளனர்.

இதில், பலரும் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில்,'ரசாயன உரங்கள் பயன்பாட்டால், மண்ணில் இயற்கை தன்மை மாறிவிட்டது. விவசாயத்துக்கு ரசாயன இடு பொருட்கள்.பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகிறோம். அரசு மானியம் வழங்கி இயற்கை விவசாயத்தை ஊக்கபடுத்தினால், அனைவரையும் இயற்கை விவசாயிகளாக மாற்ற முடியும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X