பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வார விழா டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

Added : ஜன 16, 2020
Advertisement
 சாலை பாதுகாப்பு வார விழா  டிரைவர்களுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரி:நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, கோத்தகிரியில் போக்குவரத்து போலீசார் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில், போக்குவரத்து போலீசார், டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதில், 'வளைவுகளில் மெதுவாக செல்ல வேண்டும்; டிரைவர்கள் மது அருந்தியோ மொபைல் போன் பயன்படுத்தியோ வாகனங்களை இயக்க கூடாது; வளைவுகள் நிறைந்த சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்;

சாலைகளில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க வேண்டும்; டிரைவர்கள் லைசென்ஸ் உட்பட அனைத்து ஆவணங்களையும் புதுப்பித்து, கையில் வைத்திருக்க வேண்டும்; விபத்துகள் நடக்காமல், சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்,' என, டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, வாகனங்களுக்கு முகப்பு 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. இதில், போக்குவரத்து போலீசார், டிரைவர்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X