பொது செய்தி

தமிழ்நாடு

எல்லை கிராமங்களில் பன்றி காய்ச்சல் அச்சம் : சுகாதார துறையினர் தொடர் பரிசோதனை

Added : ஜன 16, 2020
Advertisement
 எல்லை கிராமங்களில் பன்றி காய்ச்சல் அச்சம் : சுகாதார துறையினர் தொடர் பரிசோதனை

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால், சுகாதார துறையினர் கிராமங்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.

பந்தலுார் அருகே நெல்லியாளம் காட்டிக்குன்னு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் விஜிதா,22. கர்ப்பிணியான இவர், எருமாடு அருகே கொத்தலக்குண்டு கிராமத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இவரை கூடலுாரில் உள்ள அக்கார்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காய்ச்சல் தீவிரமடைந்த தால் மேல் சிகிச்சைக்காக கேரளா மாநிலம் கோழிக்கோடு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த, 13ஆம் தேதி 'சிசேரியன்' மூலம் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவமான சில மணி நேரங்களில் விஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். 'அவர், பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் உயிரிழந்தார்,' என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர்.

அதனையடுத்து, கடந்த,14ஆம் தேதி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நெல்லியாளம் கோட்டைக்குன்னு கிராமத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார்.அத்துடன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி தலைமையிலான சுகாதார துறையினரும் ஆய்வு செய்தனர். அதில், 'எருமாடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் கேரளா மாநிலத்திற்கு தினசரி வேலைக்கு சென்று வருவதால், அங்கிருந்து பன்றிக்காய்ச்சல் யாருக்கேனும் பரவி, அதன் மூலம் விஜிதாவும் பாதித்திருக்க கூடும்,' என, சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 'பழங்குடியினர் கிராமங்கள்,தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பிற கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டு காய்ச்சல் பாதிப்பு மற்றும் பன்றி காய்ச்சல் அறிகுறிகள் குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நேற்று கொத்தலகுண்டு கிராமத்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் புரூஸ், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். காய்ச்சல் பாதிக்கப் பட்டவர் களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டது. 'காய்ச்சல் பாதிப்பு அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் அல்லது அரசு மருத்துவமனையை நாட வேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X