பல இடங்களில் சோதனை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Added : ஜன 16, 2020
Advertisement

குன்னுார்:பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், பல இடங்களில் வாகன சோதனை நடந்ததால், அதிருப்தி ஏற்பட்டது.

நீலகிரி, பர்லியார் வழியாக, குன்னுார், ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் நாள்தோறும் வருகின்றன. இந்நிலையில்,'நேற்று பர்லியார், காட்டேரி, குன்னூர் பஸ் ஸ்டாண்ட், பிருந்தாவன், அருவங்காடு, கீர்த்தி,' என, பல இடங்களிலும், சுற்றுலா பயணிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி வாகன சோதனை நடத்தப்பட்டது.இதனால், பொங்கல் பண்டிகை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் பலருக்கும் நேரம் வீணாகியதால் அதிருப்தி ஏற்பட்டது.

சுற்றுலா பயணிகள் கூறுகையில்,'வரும் வழியில், பல இடங்களிலும் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். இவை நல்ல விஷயம் என்றாலும், ஒவ்வோர் இடத்திலும் கூடுதல் நேரம் செலவழித்து செல்ல வேண்டி இருப்பதால், சுற்றுலா மையங்களுக்கு முழுமை யாக சென்று பார்வையிட்டு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை மேற்கொண்டால், எங்களின் நேரம் வீணாகாது,' என்றனர்.போலீசார் கூறுகையில்,'மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X