பொது செய்தி

தமிழ்நாடு

போலீசார் நடத்திய பொங்கல் விழா பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி

Added : ஜன 16, 2020
Advertisement

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பழங்குடியின கிராமங்களில் போலீசார் சார்பில், பொங்கல் விழா நடத்தப்பட்டது.

பந்தலுார் அருகே, சேரம்பாடி போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, முருக்கம்பாடி, வட்டக்கொல்லி ஆகிய பழங்குடியின கிராமங்களில் பொங்கல் வைத்து கொண்டாடினர். இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் தலைமை வகித்தார். இதில், கிராமங்களுக்கு மையத்தில் பொங்கல் வைத்து, பொங்கல் மற்றும் கரும்பு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும், 'பழங்குடியின மக்களின் பிரச்னைகளை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது; பழங்குடியின மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காண முன்வந்து வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்,' எனவும் அறிவுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், சேரம்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த கதிரவன், சந்துரு, நக்சல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சர்புதீன், சிறப்பு பிரிவு காவலர் பிரபாகரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

* பந்தலுாரில் மகாத்மா காந்தி பொது சேவா மையம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியவை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை நடத்தின. வருவாய் ஆய்வாளர் காமு, சேவா மைய தலைவர் நவுசாத், நிர்வாகி சுரேஷ், பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்ரமணியம், நிர்வாகிகள் தேவதாஸ், தனிஷ்லாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X