பொது செய்தி

தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து முகாம்

Added : ஜன 16, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம், 50 இடங்களில் வரும், 19ம் தேதி நடக்கிறது.

கோவை மாவட்டத்தில், போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கோவை மாவட்டத்தின் கிராமப்புறங்களில், 1,202 மையங்கள், நகர்ப்புறங்களில், 379 மையங்கள் என, மொத்தம், 1,581 மையங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், விமான நிலையம், கோவில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், 36 மையங்கள் மற்றும், 18 நடமாடும் சிறப்பு மையங்கள் அமைக்கப் படுகின்றன.முகாமுக்கு தேவையான சொட்டு மருந்துகள் அனைத்தும், மையங்களுக்கு அனுப்பப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இப்பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், பிறதுறை அதிகாரிகள் என, 1,536 பணியாளர்கள் ஈடுபடுவர்.இது குறித்து மருத்துவ பணியாளர்கள் கூறியதாவது:போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது. இதன் வாயிலாக, எவ்விதமான பின்விளைவுகளும் ஏற்படாது. ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் வரும், 19ம் தேதி தவறாமல் போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை குழந்தைகளின் பெற்றோர் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X