பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை

Added : ஜன 16, 2020
Advertisement
 பொங்கல் கோலாகலம் கோவில்களில் சிறப்பு பூஜை

அன்னுார்:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அன்னுார் வட்டாரத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன; திரளான மக்கள் பங்கேற்றனர்.அன்னுார், மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜைகள் நடந்தன.

சிறப்பு அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார். மன்னீஸ்வரர் கோவில், கரிவரதராஜப் பெருமாள் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.பிள்ளையப்பம்பாளையம், செல்வநாயகியம்மன் கோவிலில், பொங்கலை முன்னிட்டு, மதியம் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில், கணேசபுரம், மாரியம்மன் கோவில் ஆகியவற்றில் பக்தர்கள் திறன்று வழிபாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X