பொது செய்தி

தமிழ்நாடு

இரு மாதமாக நிரம்பி வழியும் தடுப்பணைகள்: மகிழ்ச்சியில் திளைக்கும் விவசாயிகள்

Added : ஜன 16, 2020
Advertisement
 இரு மாதமாக நிரம்பி வழியும் தடுப்பணைகள்: மகிழ்ச்சியில் திளைக்கும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்:சென்னம்பாளையத்தில் உள்ள தடுப்பணை நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரமடை ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், வாய்க்கால் பாசனமோ, ஆற்றுப் பாசனமோ ஏதும் இல்லை. இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், வானம் பார்த்த பூமியாக உள்ளன. கிணற்றுத் தண்ணீரையும், மழையையும் நம்பி, விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

காரமடை அருகே உள்ள ஏழு எருமை பள்ளம் என்ற பெரிய பள்ளம், பெரியநாயக்கன் பாளையத்தில் துவங்கி, வீரபாண்டி பிரிவு, பிலிச்சி, சிக்காரம்பாளையம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் வழியாக, சிறுமுகை அருகே உள்ள பவானி ஆற்றில், சேரும் வகையில் அமைந்துள்ளது.சுமார் 30 கி.மீ.,க்கு மேல் உள்ள இந்தப் பள்ளம், பல கிராமங்கள் வழியாக பவானி ஆற்றுக்கு செல்கிறது.

பருவமழை காலங்களில் பள்ளத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றுக்கு செல்வதால், விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாமல் இருந்து வந்தது.காரமடை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், இந்த பள்ளத்தில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்தது.

சிக்காரம்பாளையம் ஊராட்சியில், நான்கு இடங்களிலும், பெள்ளாதி ஊராட்சியில் மூன்று இடங்களிலும், ஜடையம்பாளையம் இரண்டு இடங்களிலும், பெள்ளேபாளையம் ஊராட்சியில், நான்கு இடங்களிலும் இந்தப் பள்ளத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

இதில், சென்னம்பாளையம் அருகே ஏழு எருமை பள்ளத்தில், 15 அடி உயரம், 200 அடி நீளத்தில், 2012ம் ஆண்டில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை நிறைந்தால் அரை கி.மீ., துாரத்திற்கு பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும்.சென்னம்பாளையம் விவசாயிகள் கூறிய தாவது:சென்னம் பாளையம் தடுப்பணை நிரம்பினால் மூன்று மாதத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கும். இந்த ஆண்டு, பருவ மழையால் கடந்த இரு மாதங்களுக்கு முன் தடுப்பணை நிரம்பியது.

இதுவரை, நீர் வரத்து இருப்பதால், தடுப்பணை நிறைந்து, தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் சுற்றுப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு புதிதாக நீரூற்றுகள் கிடைத்து வருகின்றன.

குறுகிய காலப் பயிர்களை மட்டுமே விவசாயம் செய்துவந்த விவசாயிகள், நீண்ட காலப் பயிரான வாழை பயிர் செய்துள்ளனர். தடுப்பணைக்கு நீர்வரத்து இருப்பதால், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X