பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழா

Added : ஜன 16, 2020
Advertisement
 கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழா

கோவை புறநகர் பகுதிகளில், கடந்தாண்டு இரு பருவமழைகளும் திருப்தியாக பெய்துள்ளதால், விவசாயம் செழிப்படைந்துள்ளது. இதனால், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மனமகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி, சூலுார் சுற்று வட்டார கிராமப்புறங்களில், காலையில், சூரிய பொங்கல் வைத்து குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். ஊர்களில் உள்ள பல்வேறு இயக்கங்கள் சார்பில், பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

காடம்பாடி இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.காங்கயம்பாளையம் சக்தி நகர் பகுதியில், பொங்கல் வைத்தல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

சூலுார் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில், நடந்த போட்டிகளில் குழந்தைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஊஞ்சப்பாளையத்தில் நடந்த விளையாட்டு மற்றும் கோலப் போட்டியில், குழந்தைகள், பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

சின்னியம்பாளையத்தில் நுகர்வோர் சங்கத்தின் சார்பில், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடந்தன.

* சிறுமுகை அடுத்த சென்னம்பாளையம் கிராமத்தில், இளைஞர்கள் பொதுப்பணி நல சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, ஒன்பதாம் ஆண்டு தைப்பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தினர்.இதில், ஓட்டப்பந்தயம், பலுான் ஊதுதல், திருக்குறள் ஒப்புவித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள், கோலப்போட்டி, உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.

ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து, மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.* சிறுமுகை அடுத்த வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள வி.கே.பி., கிங்ஸ் அணியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, பொங்கல் விழா கொண்டாடினர். வாலிபால் போட்டிகளை நடத்தினர். இதில், 16 அணியினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X