பொங்கலுக்கு தொடர் விடுமுறை போக்குவரத்து நெரிசலால் கவலை

Added : ஜன 16, 2020
Advertisement
 பொங்கலுக்கு தொடர் விடுமுறை போக்குவரத்து நெரிசலால் கவலை

அன்னுார்:பொங்கல் தொடர் விடுமுறையால், அன்னுாரில் நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள், விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனுடன் சனி, ஞாயிறுயும் (18, 19ம் தேதிகள்) சேர்ந்து கொள்வதால், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்கள், மேட்டுப்பாளையம், பண்ணாரி கோவில்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்றதால், அன்னுார் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை ரோட்டில், அல்லிக்காரம்பாளையம் பிரிவு வரை வாகனங்கள் நகர வழியின்றி தேங்கி நின்றன. சத்தி ரோட்டில், அல்லிகுளம் பிரிவு வரை வாகனங்கள் நின்றன. அவிநாசி ரோட்டில், அரசு மேல்நிலைப்பள்ளி வரை வாகனங்கள் நின்றன.போலீசார், சத்தி ரோடு கார்னர் மற்றும் கைகாட்டியில் நின்று, நீண்ட நேரம் போராடி, நெரிசலை சரி செய்தனர்.

எனினும், காலை முதல் மாலை வரை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாகனங்கள் நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் காத்திருந்த பின், அன்னுாரை கடந்து சென்றன. அன்னுாருக்கு வெளியே, கிழக்கு, மேற்கு புறவழிச்சாலைகள் அல்லது உயர்மட்ட மேம்பாலம் ஆகியவை அமைத்தால் மட்டுமே, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X