36 மத்திய அமைச்சர்கள் காஷ்மீர் பயணம்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Advertisement
36 மத்திய அமைச்சர்கள் காஷ்மீர் பயணம்

புதுடில்லி: வரும் ஜன18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 36 மத்திய அமைச்சர்கள் காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து இருயூனியன் பிரதேசங்களும் துணை நிலை கவர்னர்கள் ஆட்சியின் கீழ் செயல்படுகிறது.






இந்நிலையில் 36 மத்திய அமைச்சர்கள் , வரும் ஜன. 18-ம் தேதி முதல் 24 ம் தேதி வரை காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இரு யூனியன் பிரதேசங்களிலும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு நிலவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.

முன்னதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன்ரெட்டி, ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
16-ஜன-202012:36:03 IST Report Abuse
Dr. Suriya இந்த குடத்தோடதா அந்த மோர்கனுவொளுக்கு சப்போர்ட் பண்ணும் கட்சியினரையும் அழைத்து சென்று சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு காஷ்மீர் எவ்வளவு அமைதியாக உள்ளது என்பதை காண்பிக்கவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
16-ஜன-202007:50:29 IST Report Abuse
RajanRajan பாகிஸ்தானின் அரசியல் சார்ந்த உள்ளூர் கைக்கூலிகள் முதலில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் NIA நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காசுக்காக விலை போகும் காங்கிரஸ் கட்சி அசாதுக்கள் அப்துலாக்கள் கிங்க்பின் அய்யர் போன்றோர்களை விட்டு வைக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜன-202006:08:44 IST Report Abuse
blocked user தேசவிரோத காங்கிரஸ் மட்டைகள் இப்பொழுதெல்லாம் பாகிஸ்தானுக்கு அடிக்கடி செல்கிறார்கள். கிங்க்பின் கூட அதன் சார்பில் மணி சங்கர் அய்யரை அனுப்பி வைத்து இருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X