காட்டு யானைகளால் பயிர் சேதம் கிராம மக்களுக்கு உயிர் அச்சம்

Added : ஜன 16, 2020
Advertisement
 காட்டு யானைகளால் பயிர் சேதம் கிராம மக்களுக்கு உயிர் அச்சம்

பெ.நா.பாளையம்:கோவை புறநகர் பகுதியில் சின்ன தடாகம், ஆனைகட்டி, நரசிம்மநாயக்கன் பாளையம், கோவனுார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக, காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

சின்னத்தடாகம் வட்டாரத்தில் பாப்பநாயக்கன் பாளையத்தில், நேற்று முன்தினம் இரவு ஒரு குட்டியுடன் புகுந்த யானை, அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. தோட்டத்து சாளைக்குள் புகுந்து, அங்கிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்றும் தாய் மற்றும் குட்டி யானை சோமையனுார், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தன. சோமையனுார் பகுதியில் தோட்டத்து வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த, குடிநீர் குழாயை உடைத்து சேதப்படுத்தின. சோளம், வாழை மரங்களையும் சேதப்படுத்தின.வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் காட்டு யானைகளை விரட்டும் பணியில் விடிய விடிய ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை, அனுவாவி சுப்ரமணியர் கோவில் வனப்பகுதிக்கு யானைகள் சென்றன.தினசரி மாலை மலையோர கிராமங்களை காட்டு யானைகள் முற்றுகையிடுவதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X