பொது செய்தி

தமிழ்நாடு

சோள விளைச்சல் அமோகம் சூலுார் விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஜன 16, 2020
Advertisement

சூலுார்:சூலுார் வட்டாரத்தில் மஞ்சள் சோளம், மக்காச்சோளம் விளைச்சல் அதிகரித்திருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூலுார் மற்றும் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் மானாவாரி நிலங்கள் பல ஆயிரம் ஏக்கர் உள்ளது. இவற்றில் முக்கிய பயிராக மஞ்சள் சோளம் மற்றும் மக்காச்சோளம் பயிரிடப் படுகிறது.பதுவம்பள்ளி காடுவெட்டிபாளையம், மோள காளிபாளையம், வலையபாளையம், வாகராயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள் சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

மேலும், நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள, ராவத்துார், அத்தப்ப கவுண்டன் புதுார், இருகூர் ராசிபாளையம், அருகம்பாளையம் மாதப்பூர், செம்மாண்டம் பாளையம் கணியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மஞ்சள் சோளம் பயிரிடுவது வழக்கம்.இந்த ஆண்டு சூலுார் சுல்தான்பேட்டை வட்டாரத்தில், பருவமழை நல்ல முறையில் பெய்ததால், விவசாயிகள் மஞ்சள் சோள சாகுபடியில் அதிக ஈடுபாடு காட்டினர்.

சுல்தான்பேட்டை வட்டாரத்தில், மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு இருந்தது. பருவமழையின் பயனாக மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ச்சியடைந்து காணப்பட்டன. பொங்கலையொட்டி அவற்றை அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகள் போல் இல்லாமல், இந்த தை மாதம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன், மழை சரிவர பெய்யாததால், மஞ்சள் சோள விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், கால்நடைகளுக்கு தீவனம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது.காய்கறிகள், பயிறு வகை பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்தது. ஆனால், இந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால், சோளம் நல்ல முறையில் விளைச்சலை கொடுத்துள்ளது. சோளத்தட்டை களும் அதிகமாக கிடைத்துள்ளது.

இதனால், கால்நடைகளுக்கு தீவன பிரச்சனை என்பது இவ்வாண்டு இருக்காது.பால் வரத்து அதிகரிக்கும். இதேபோல், மக்காச்சோளம் பயிர்களும் நல்ல கதிர்களுடன் விளைச்சல் நன்றாக இருந்தது. மொத்தத்தில் இந்த தை மாதம் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X