பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வரும் பொங்கல் பரிசு!

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை:விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை, வீடு தேடிச் சென்று கொடுக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு கடைக்கும் ஆளுங்கட்சி தரப்பில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 9 லட்சத்து, 70 ஆயிரத்து, 609 அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், 9 லட்சத்து, 39 ஆயிரத்து, 438 கார்டுதாரர்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றனர். இன்னும், 32 ஆயிரத்து, 171 பேர் பெறாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு வழங்க, வரும், 21 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'பரிசு தொகுப்பு பெறாத
கார்டுதாரர்களின் பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொபைல் போன்களில், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். கடைக்கு வர முடியாத
சூழலில் இருந்தால், வீட்டுக்கே நேரடியாகச் சென்று, பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுஉள்ளது' என்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X