பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 'பொன்னியின் செல்வன்' வரும் 19ல் கண் முன்னே காணலாம்!

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை:எத்தனையோ நாவல்கள், கதைகள் இருந்தாலும், கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல் இன்று வரை, லட்சக்கணக்கான வாசகர்கள் மனதில், நீங்கா இடம் பிடித்துள்ளது.

அழுத்தமான சரித்திர பின்னணி, நிகழ்வுகளை தாண்டி, கல்கி நாவல் எழுதிய விதம், இன்று வரை வாசகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.படிக்கும் வாசகர்கள் நிஜம் எது, கற்பனை எது என்று பிரித்து, பார்க்க முடியாத அளவுக்கு, கல்கியின் கற்பனை வளம் தெரியும். பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரங்கள், ஒவ்வொன்றும் வாசகர்கள் மனதில், பதிந்து போனது மறுக்க முடியாது.

இந்த நாவல், சுவாரஸ்யம் குறையாமல் கடைசி வரை செல்ல, அமரர் கல்வி, இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக மாறி, நம்மோடும் நாவலோடும் பயணித்திருப்பதுதான், முக்கிய காரணம்; அவரே கதை நடக்கும் சூழலுக்கு, நம்மை அழைத்துச் செல்கிறார்; கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறார்.

பொன்னியின் செல்வன் நாவலை நாடகமாக மாற்றி, அதே கதாபாத்திரங்களை, அதே தன்மையோடும், ஜீவனோடும், மேடையில் கொண்டு வருகின்றனர், சென்னையில் உள்ள குட்டி
குழுவினர்.'கூல் ஈவென்ட்ஸ்' நிறுவனம், இந்நாவலை, 'வந்தியத்தேவனின் வீரப்பயணம்' என்ற தலைப்பில், நாடகமாக்கி அசத்தி வருகிறது.

பிரபல நாடக ஆசிரியர் சந்திரமோகனின் நாடகமாக்கம் மற்றும் வசனத்தில், இந்நாடகம் குட்டியின் இயக்கத்தில் அரங்கேறி வருகிறது. நாவலில் உள்ளதுபோல், இந்நாடகத்திலும்
அத்தனை கதாபாத்திரங்களும், மனதில் நிற்கின்றன.இதில் நடித்த கலைஞர்களும், நாம் காணாத கதாபாத்திரங்களை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.இந்நாடகம், கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், வரும், 19ம் தேதி மதியம், 2:30 மணிக்கும், மாலை 6:30 மணிக்கும் என, இரு காட்சிகளாக நடக்கிறது. டிக்கெட் தொடர்புக்கு, 99412 95445.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X