பொது செய்தி

தமிழ்நாடு

தை பிறந்தது; வழி பிறக்கும்! பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க... சமூக வலைதளங்களில் கருத்துகேட்பு

Added : ஜன 16, 2020
Advertisement
 தை பிறந்தது; வழி பிறக்கும்!  பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க... சமூக வலைதளங்களில் கருத்துகேட்பு

தென்னை நகரம், பசுமை நகரம் என பல்வேறு சிறப்பு கொண்ட பொள்ளாச்சி, வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை உள்ளடக்கிய பகுதியாகவும் விளங்குகிறது.

சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ள பொள்ளாச்சி, சினிமா பட கலைஞர்களுக்கு சொர்க்க பூமியாக உள்ளது. தென்னை மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் மாநிலத்தில் முதன்மையான பகுதியாகும்.பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு, வேளாண் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இது குறித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனும் சட்டசபை கூட்டத்தொடரின் போது, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, மடத்துக்குளம் மற்றும் உடுமலை பகுதியை இணைத்து, வேளாண் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.எனினும் பல்வேறு பகுதிகளை பிரித்து, மாவட்டமாக அறிவிக்க ஆர்வம் காட்டும் தமிழக அரசு, பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கனவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் எழுந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை பிரிக்கும் போது, பொள்ளாச்சியையும் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று, சமூக வலைதளங்களில், கருத்துக்களை பதிவிட்டு, தங்களது ஆதங்கத்தை வெளிப் படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர், பேஸ்புக்கில், மக்களிடம் கருத்து கேட்பு நடத்தி வருகின்றனர்.

அதில், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும்; எந்தெந்ததாலுகா இடம் பெற வேண்டும், பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டால்? உங்கள் விருப்பம் என்ன? என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.இதில், மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு, தாலுகாக்களை இணைக்க வேண்டுமென ஓட்டு அளித்தும் வருகின்றனர்.


முதல்வருக்கும் 'டுவிட்



'பொள்ளாச்சி பகுதி வளர்ச்சி சங்கத்தினர் கூறியதாவது:பொள்ளாச்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மக்களிடம் தாலுகாக்கள் இணைவது குறித்து கருத்து கேட்பு, மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதன் அவசியம் குறித்தும் கேட்டு வருகிறோம். அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் கருத்து கேட்பு மற்றும் ஓட்டெடுப்பும் நடத்தப்படுகிறது.

பேஸ்புக் மட்டுமின்றி, முதல்வர், துணை முதல்வர், துணை சபாநாயகர், அமைச்சர்களுக்கு பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்க வேண்டும் என, 'டுவிட்' செய்து வலியுறுத்தி வருகிறோம். பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையை அரசு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டமாக அறிவித்தால் மிகுந்த பலன் கொடுக்கும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X