பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரியத்துடன் பொங்கல் விழா கோலாகலம்: பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement
 பாரம்பரியத்துடன் பொங்கல் விழா கோலாகலம்: பள்ளி, கல்லூரிகளில் கொண்டாட்டம்

பொள்ளாச்சி பாரதியார் பல்கலை கல்லுாரியில், தமிழர் திருநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொ) கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். விழாவையொட்டி, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பாரம்பரிய உடையில் வந்து, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.மேலும், பட்டி அமைத்து, மாட்டுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மாணவர்கள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்களுக்கான போட்டி நடந்தது.கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளை மாணவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பாரம்பரிய இசை கருவிகள் வாசித்து, விழாவை கொண்டாடினர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

* பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். விழாவில், மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் பங்கேற்றனர். மருத்துவமனை நுழைவு வாயிலில் பொங்கல் வைத்து பொங்கலோ பொங்கல் என, குலவை எழுப்பி மகிழ்ந்தனர். மருத்துவமனை ஊழியர்களுக்கு இடையே உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் நடராஜ் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

* பொள்ளாச்சி நகராட்சி ஜோதிநகர் நட்சத்திர பூங்காவில், நாற்று நடவு மற்றும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை வகித்தார். நகர் நல அலுவலர் மாணிக்கவேல் ராஜன், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து, நாற்று நடவு நிகழ்ச்சி நடந்தது. வெங்காயம், நிலக்கடலை, சர்க்கரைவல்லி கிழங்கு, கீரை வகைகள் உள்ளிட்ட பல பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன.

* பொள்ளாச்சி சக்தி தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இதில், மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நடனம், பாட்டு, உறியடி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

* பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பி.வி.எம்., பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
* பொள்ளாச்சி சிவாலிக் மெட்ரிக் பள்ளியில் நடந்த, பொங்கல் விழாவில், பள்ளி தாளாளர் செல்வநாயகம், முதல்வர் செல்வராஜ், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு கபடி உறியடி, சிலம்பாட்டம், ரங்கோலி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

* ஜமீன்முத்துார் மகரிஷி பள்ளி விழாவில், மாணவர்கள், சிலம்பாட்டம், கும்மியாட்டம், கூத்து, பறையாட்டம், உறியடித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்கள் நான்குகுழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

* ஜமீன்முத்துார் ஏ.ஆர்.பி., இண்டர்நேஷனல் பள்ளி பொங்கல் விழாவில், பள்ளி முதல்வர் அரசு பெரியசாமி, பள்ளி தாளாளர் சுப்ரமணியம், பள்ளியின் நிர்வாகி தங்கமணி ஆகியோர் பேசினர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக உறியடித்தல், கம்பு சுழற்றுதல், பொம்மை காளை அடக்குதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. பள்ளி செயலாளர் தமிழ்செல்வன், பள்ளியின் நிர்வாகி மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* திவான்சாபுதுார் கிருஷ்ணா வித்யாலயா பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்கள் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர். மாணவர்களுக்கு, உறியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடத்தப்பட்டன. நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், மான்கொம்பு ஆட்டம், சிலம்பாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* ஆனைமலை ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவை, கல்வி மாவட்ட அலுவலர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். மாணவர்களின் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* கோமங்கலம்புதுார் வித்ய நேத்ரா பள்ளி பொங்கல் விழா, மகாத்மா காந்தி, 150வது ஆண்டு விழா, விவேகானந்தர் விழா என முப்பெரும் விழா நடந்தது. மாணவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாணவர்களுக்கு கோலம், கும்மி, உறியடித்தல், சாக்கு ஓட்டம், டயர் ஓட்டம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பேச்சு, கட்டுரை, கவிதை, பாடல் ஒப்புவித்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. பள்ளி தாளாளர் டாக்டர் பாலசுந்தரம், செயலர் நந்த கோபாலகிருஷ்ணன், முதல்வர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சமி தலைமையில் நடந்தது. விழாவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* வால்பாறை அரசு மருத்துவமனையில் சமத்துவபொங்கல் விழா, தலைமை மருத்துவர் (பொ) சுரேந்திரன் தலைமையில் நடந்தது. விழாவில், டாக்டர்கள் மகேஸ்ஆனந்தி, மஞ்சுளா மற்றும் செவிலியர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில், மருத்துவமனை உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் கலந்து கொண்டனர்

* கிணத்துக்கடவு, அண்ணாநகர் இளைஞர் அணி, பொதுமக்கள் சார்பில், 12ம் ஆண்டு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தது. கோட்டை வலம்புரி விநாயகர் கோவிலில் சமத்துவ பொங்கல் வைத்து, மக்கள் மகிழச்சியை வெளிபடுத்தினர். அதன்பின், தண்ணீர் ஊற்றி உறியடித்தல், கண்ணைக்கட்டி உறியடித்தல், கோலப்போட்டி நடந்தது. சிறுவர், சிறுமியருக்கான உருளைகிழங்கு சேகரித்தல், பிஸ்கட் கடித்தல், பலுான் ஊதி உடைத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், 200 மீட்டர் ஓட்டம், சாக்கு ஓட்டம், கரும்பு கடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வயது வரம்பின்றி அனைவருக்குமான, லக்கி கார்னர், மியூசிக் சேர், குத்துவிளக்கு ஏற்றும் போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து வள்ளி கும்மி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X