பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழா வருவாயில் கோசாலை அமைக்கணும்! இந்து அறநிலையத்துறைக்கு பக்தர்கள் வலியுறுத்தல்

Added : ஜன 16, 2020
Advertisement

உடுமலை:ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி பெறப்படும் வருவாயில், கோசாலை அமைத்து, கன்றுகளை பராமரிக்க இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை சோமவாரப்பட்டியில், உள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு, பொங்கலன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகளை அப்பகுதி மக்கள், காணிக்கையாக வழங்குகின்றனர். பொங்கலையொட்டி நடக்கும் திருவிழாவில், கன்று, ஆடு, சேவல் ஆகியவற்றை கோவிலுக்கு காணிக்கையாக வழங்கும் பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

இவ்வாறு, கோவிலுக்கு வழங்கப்படும் கால்நடைகளை இந்து அறநிலையத்துறையினர், இரண்டு நாட்கள் கோவிலில் வைத்து பராமரித்த பின்னர், பிற மாவட்டங்களிலுள்ள கோசாலைக்கு அனுப்புகின்றனர். இச்செலவிற்காக, கால்நடைகளை வழங்கும் பக்தர்களிடம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டண முறையால், பாதிக்கப்படும் பக்தர்கள், கன்றுகளை விலைக்கு விற்று, அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர்.

கால்நடைகளுக்கென பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வழங்கப்படும் கன்றுகளை அங்கேயே பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. அதற்கேற்ப திருவிழாவின் போது, கேளிக்கை, விளையாட்டு சாதனங்கள் அமைத்தல் மற்றும் தற்காலிக கடைகள் அமைக்க, இந்து அறநிலையத்துறை சார்பில், ஏலம் விடப்படுகிறது.

நடப்பாண்டும், 10 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு, ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆண்டுதோறும், கோவிலுக்கு கிடைக்கும் வருவாயில், கோசாலை அமைத்து, காணிக்கையாக பெறப்படும் கன்றுகளை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.வரும் திருவிழாவின் போது, இது குறித்து கால்நடைத்துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மனு அளிக்க பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X