பொது செய்தி

தமிழ்நாடு

விதைப்பண்ணைகளில் 50 டன் விதை நெல் உற்பத்தி: அடுத்த பருவ சாகுபடிக்கு தயாராகிறது

Added : ஜன 16, 2020
Advertisement
 விதைப்பண்ணைகளில்  50 டன் விதை நெல் உற்பத்தி: அடுத்த பருவ சாகுபடிக்கு தயாராகிறது

மடத்துக்குளம்:திருப்பூர் மாவட்ட அளவிலான அடுத்த பருவ சாகுபடிக்கு, 50 டன் விதை நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.

திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், விதைப்பண்ணைகள் உள்ளன. இந்த அரசு விதைப் பண்ணைகள் மூலம் விதை நெல் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்ட அளவில் உள்ள வேளாண்மைத்துறை குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டு, சாகுபடி தொடங்கும்போது விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படுவது வழக்கம்.

மடத்துக்குளம் பகுதியிலுள்ள விதைப்பண்ணை மூலம் அடுத்த சாகுபடிக்கு, தற்போது, 50 டன் விதைநெல் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோ 51, ஏ.டி.டி. டி 45 ஆகிய ரக விதைகள் கடந்த ஆண்டு செப்டம்பரில் சாகுபடி செய்யப்பட்டன.தற்போது நெல் பயிராக வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன. இருபது ஏக்கரில் இந்த விதைநெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 50 டன் விதைகள் அறுவடை செய்யப்படும்.இதற்குப்பின், சுத்திகரிப்பு தரம் பிரிப்பு ஆகியவற்றிற்குப்பின், விதைகளுக்கான அரசு சான்று அட்டை பொருத்தி அரசு குடோன்களுக்கு அனுப்பப்படும். இந்த அடிப்படையில் மடத்துக்குளம் பகுதியில் இருந்து, 50 டன் விதைகள் மாவட்ட அளவிலான சாகுபடிக்கு தயாராகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X