தார் ரோடு மண் ரோடானது பயணிக்க முடியாமல் அவதி| Dinamalar

தார் ரோடு மண் ரோடானது பயணிக்க முடியாமல் அவதி

Added : ஜன 16, 2020
 தார் ரோடு மண் ரோடானது பயணிக்க முடியாமல் அவதி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி, பட்டணம் பிரிவில் இருந்து செட்டியக்காபாளையம் வரையுள்ள ரோடு மண்பாதையாக காட்சியளிக்கிறது.

கோதவாடி மாலை கோவில் அருகே, பட்டணம் பிரிவில் இருந்து, செட்டியக்காபாளையம் வரையுள்ள இரண்டு கி.மீ., துாரமுள்ள தார்ரோடு, நபார்டு திட்டத்தில் அமைக்கப்பட்டது.புதிதாக தார்ரோடு போடும்போதே தரமின்றி இருந்தது. கனரக வாகனங்கள் சென்றதாலும், ரோடு பராமரிப்பு பணிகள் செய்யாததாலும், தார் ரோடு குண்டும், குழியுமாக மாறியது.

இவ்வழியாக சென்ற வாகனங்கள், குழிகளில் சிக்கி விபத்து ஏற்பட்டு வந்ததால், கனரக வாகனங்கள் கோதவாடி மாலை கோவிலில் இருந்து, கிழக்கு நோக்கி செல்லும் ரோடு வழியாக சுற்றி சென்று வருகின்றன.இந்த ரோடு அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளாகிறது.

புதிதாக தார்ரோடு போட ஒன்றிய பொறியாளர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், இதன் அருகே பட்டணம் வரை மூன்று கி.மீ., துாரம் வரையுள்ள தார்ரோடு புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். விரைவில், புதிய தார் ரோடு அமைக்க ஒன்றிய பொறியாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X