பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் செலவு ரூ.5 கோடி!

Added : ஜன 16, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மரங்கள் வளர்ப்போம்; பாதுகாப்போம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

பொள்ளாச்சி அருகே ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், புத்தாண்டு மற்றும் பொங்கலையொட்டி மரங்கள் வளர்ப்போம் என உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியை சுகுணாராணி, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பது அன்றைய வாசகம்; ஆளுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என கூறியதுடன், மரம் வளர்த்தலின் அவசியம் மற்றும் நன்மைகள் பற்றி விளக்கி பேசினார்.

பொள்ளாச்சி கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஞானசேகர், 53 மரக்கன்றுகளை தனித்தனியாக மாணவர்களின் வீடுகளில் வளர்க்க, புத்தாண்டு, பொங்கல் பரிசாகவழங்கினார்.மேலும், புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றுச்சூழலை காக்கவும் ஒவ்வொரு தனிமனிதரும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மாணவர்கள் மரம் பற்றிய பொன்மொழிகள், பழமொழிகள், கவிதைகள் வாசித்தனர்.அறிவியல் பட்டதாரி ஆசிரியை கீதா பேசியதாவது:ஒரு நாளைக்கு மனிதன், மூன்று சிலிண்டர் அளவு ஆக்சிஜனை சுவாசிக்கிறான். ஒரு ஆண்டுக்கான ஆக்சிஜன் சிலிண்டரின் விலை, 7,66,500 ரூபாயாகும்.

ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம், 65 ஆண்டுகள் எனில், ஆக்சிஜன் செலவு, ஐந்து கோடி ரூபாயாகும்.எனவே மரங்கள் தரும் பரிசு விலை உயர்ந்தவை; அட்சயபாத்திரமான மரங்களை நாம் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு பரிசு அளிப்போம்.இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில் ஆசிரியர்கள், தேசிய பசுமை படை குழு உறுப்பினர்கள் கவுதம், கதிர்வேல் பேசினர்.விழாவையொட்டி, 50 மாணவர்கள், 50 மரக்கன்றுகளை கைகளில் ஏந்தி, 2020ம் ஆண்டை குறிப்பிடும் வகையில் அணிவகுத்து நின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X