பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளை ஈக்களை அழிக்க பூஞ்சாணம் தர கோரிக்கை

Added : ஜன 16, 2020
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் வெள்ளை ஈக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகள், தீர்வு தேடி தவிக்கின்றனர்.

இந்நிலையில், திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், வெள்ளை ஈக்களுக்கு தீர்வாக உயிரியல் முறையை முன்வைத்துள்ளது.'ஐசேரியா பூமோேஸாரோசே' எனும் பூஞ்சாண வகையை உற்பத்தி செய்து, அதை வெள்ளை ஈக்களுக்கு எதிர் உயிரியாக பயன்படுத்தி தீர்வு பெறலாம் என தெரிவித்துள்ளது.

'ஐசேரியா பூமோேஸாரோசே' பூஞ்சாணம் தென்னையில் வெள்ளை ஈக்களுக்கு மட்டுமின்றி, அனைத்து பயிர்களையும் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு தீர்வாக அமைவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.அதற்கு தேவையான தாய் பூஞ்சாண திரவத்தை மத்திய பயிர் பாதுகாப்பு மையமே இலவசமாக வழங்குகிறது.

இது குறித்து கேள்விப்பட்டதும், பெரும்பாலான விவசாயிகள், பூஞ்சாணத்தை தெளிக்க தீவிரம் காட்டுகின்றனர்.விவசாயிகள் சிலர், திருச்சி சென்று, பயிர் பாதுகாப்பு மையத்தை நேரடியாக அணுகி, தாய் திரவத்தை பெற்று வருகின்றனர். இது அனைத்து விவசாயிகளுக்கும் சாத்திய மில்லை.அதனால், அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், மத்திய பயிர் பாதுகாப்பு மையத்தில் இருந்து தாய் திரவத்தை பெற்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X