பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் பொங்கல் விழா: அம்மனுக்கு திருக்கல்யாணம்

Added : ஜன 16, 2020
Advertisement
 கோவில்களில் பொங்கல் விழா: அம்மனுக்கு திருக்கல்யாணம்

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பொங்கல் பண்டிகை நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுப்ரமணிய சுவாமி கோவிலில், முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார வழிபாடும் நடந்தது.

ஈட்டியார் எஸ்டேட் மாரியம்மன்கோவலின், 39ம் ஆண்டு விழாவில் அம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.இன்று காலை மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. மாலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.



கல்லார் எஸ்டேட் மாரியம்மன் கோவிலின்,61ம் ஆண்டு விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

சோலையாறுஎஸ்டேட் முதல் பிரிவு மாரியம்மன், முனீஸ்வரன், மதுரைவீரன் கோவிலின், 64ம் ஆண்டு விழாவில், அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜையும், திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கருமலை எஸ்டேட் சக்திமாரியம்மன், கருப்பசாமி, முனியசாமி கோவிலில் பொங்கல் விழாவில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது.

* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பொங்கலை முன்னிட்டு மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.கோவில் சன்னதியில் உள்ள அம்மன் சிலைகளுக்கும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது.நேற்று நான்கு கால பூஜை நடந்தது. பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம், பொங்கல் வழங்கப்பட்டது.
- நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X