பொங்கல் கொண்டாட்டம் காட்டு யானைகள் தவிப்பு

Added : ஜன 16, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், பொங்கல் பண்டிகை கோலாகல மாக கொண்டாடப்படுவதால் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றன.

வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. இவை கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக, பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டு, பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்கும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால், தோட்ட தொழிலாளர்கள் இரவு நேரத்தில் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், வால்பாறையை சுற்றியுள்ள பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் கோவில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இதனால், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக சப்தம் ஏற்படுத்தும் வகையில் மைக்செட்களை அமைக்க கூடாது. இரவு நேரத்தில் யானைகள் நடமாடும் பகுதியில் மக்கள் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்.அதே போல், இருசக்கர வாகனத்தில் செல்வதையோ, தனியாக நடந்து செல்வதையோ தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X