பொது செய்தி

தமிழ்நாடு

கிராமங்களில் மாட்டு பொங்கல் கோலாகலம்

Added : ஜன 16, 2020
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பகுதிகளில், இன்று மாட்டு பொங்கலையொட்டி, கிராமங்கள் களைகட்டியுள்ளன.கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் மாட்டு பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இதற்காக, வீடுகளை சுத்தம் செய்தும், சுண்ணாம்பு மற்றும் வர்ணம் பூசியும், வாசலில் மாட்டு சாணம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.மாடுகளை குளிப்பாட்டியும், கொம்புகளுக்கு வர்ணம் தீட்டியுள்ளனர். மாட்டு பொங்கலான இன்று விவசாயிகள் காலை முதலே விரதமிருக்கின்றனர். மாலை, 6:30 மணியளவில் தோட்டத்தில் ஒரு பகுதியை சுத்தம் செய்து, கல் அடுப்பு மூட்டி, மாடுகளுக்கும், தெய்வங்களுக்கும் பொங்கல் படைக்கின்றனர்.

தெப்பக்குளம் கட்டி, சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, தொப்பக்குளத்தை சுற்றி வாழை மரம் மற்றும் கரும்புகள் கட்டி அலங்காரம் செய்வர்.வாழை இலையில் பொங்கல், வாழைப்பழம் படையலிட்டு, தீபராதனை காண்பிக்கப்படும். மாவு விளக்கை தலையில் சுமந்து, வீட்டில் உள்ள குழந்தை தெப்பக்குளத்தை மூன்று முறை வலம் வருவர்.அதன்பின், மாட்டுக்கு தீபராதனை காண்பித்து, தண்ணீர் பட்டியாரே தண்ணீர், அசனம் பட்டியாரே அசனம், வாய் கழுவு பட்டியாரே என்று கூறி, கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டி விடுவர்.தெப்பக்குளத்தை மாட்டுடன் மூன்று முறை வலம் வந்து, இறுதியாக, தெப்பக்குளத்தில் மாடு தாண்டும் நிகழ்ச்சி நடக்கிறது.

மாட்டு பொங்கல் வழிபாட்டிற்கு வந்திருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பிரசாதம் மற்றும் விருந்து கொடுத்து மாட்டு பொங்கலை வெகுவிமரிசையாக விவசாயிகள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X