பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விடுமுறை ஆழியாறில் குதுாகலம்

Added : ஜன 16, 2020
Advertisement
 பொங்கல் விடுமுறை ஆழியாறில் குதுாகலம்

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பகுதியில், பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்து குதுாகலமடைந்தனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, முக்கிய சுற்றுலா பகுதியாக உள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பல்வேறு பகுதியில் இருந்து, ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆழியாறில் குவிந்தனர்.சுற்றுலா பயணிகள் பூங்காவில் விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

பூங்காவில் குடும்பத்தோடு அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.அணைப்பகுதியில் தேங்கி நின்ற நீரின் அழகை கண்டு ரசித்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், குரங்கு அருவில் கொட்டும் குளிர்ந்த நீரில் குளித்து குதுாகலமடைந்தனர்.போலீசார், வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X