ஈரான் மீதான தாக்குதல் பேரணி நடத்திய டிரம்ப்

Added : ஜன 16, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஈரான் மீதான தாக்குதல் பேரணி நடத்திய டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

மில்வாகி: மேற்கு ஆசிய நாடான ஈரானின் ராணுவ முக்கிய தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு
டிரம்ப் பேரணி நடத்தினார்.மேற்கு ஆசிய நாடான ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான சுலைமானி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சமீபத்தில் கொல்லப்பட்டார்.


latest tamil news


இதற்கு அமெரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தாண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. 'அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக டிரம்ப் நடத்திய நாடகம் இது' என ஜனநாயகக் கட்சி விமர்சித்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன் 'காகஸ்' எனப்படும் பிரதி நிதிகள் தேர்வுக்கான தேர்தல் விஸ்கான்சின் மாகாணத்தில் விரைவில் நடக்க உள்ளது.

இதற்காக குடியரசு கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஈரான் பிரச்னைகுறித்தே டிரம்ப் அதிகம் பேசினார். அவர் பேசியதாவது:உலகின் நம்பர் 1 பயங்கரவாதியாக செயல்பட்டதால்தான் சுலைமானி மீது நடவடிக்கை எடுத்தோம்.
மிகக் கொடூரமான பயங்கரவாதியான அவர் நூற்றுக்கணக்கானோர் சாவுக்கு காரணமானவர். இவரால் ஆயிரக்கணக்கானோர் கை கால்களை இழந்துள்ளனர்.இதுபோன்ற கொடூரனைக் கொன்றதால் நமக்கு நல்ல பெயர் கிடைத்து விடுகிறதே என்பதுதான் ஜனநாயகக் கட்சியினருக்கு எரிச்சல். அதனால் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜன-202015:27:31 IST Report Abuse
Natarajan Ramanathan Sampath Kumar....நான் தீவிரவாதிகளை பலி கொடுக்கணும் என்றுதான் சொன்னேன். மதத்தைபற்றி பேசவே இல்லையே
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜன-202012:47:26 IST Report Abuse
Sampath Kumar எல்லா மதத்திலும் மிக கொடூரமானவர்கள் உண்டு மிஸ்டர் நடராஜன் ஆனால் போருக்கு ஒரு பேரணி நடத்துவுது என்பது மூர்கத்தனத்தின் உச்ச கட்டம் அமெரிக்கா தான் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜன-202012:34:08 IST Report Abuse
Natarajan Ramanathan So...மோடியோ அல்லது டிரம்ப்போ....யார் வெற்றி பெறவேண்டும் என்றாலும் தீவிரவாதிகளை பலிகொடுத்தால் போதும்
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
16-ஜன-202013:20:10 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைஅருகம்புல்லை ஓரம் கட்ட ஒரு கூட்டம் விரைவில் உருவாகும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X