பொது செய்தி

தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Jallikattu,Palamedu,ஜல்லிக்கட்டு,பாலமேடு

இந்த செய்தியை கேட்க

மதுரை: மதுரை அருகேயுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.


latest tamil news


புகழ்பெற்ற மதுரை பாலமேட்டில் ஜல்லிகட்டு தொடங்கியது. முன்னதாக, 700 மாடுகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. 923 மாடுபிடி வீரர்கள் களம் இறங்குகின்றனர். பாதுகாப்பிற்காக 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். காயம்பட்டவர்களை மீட்க, 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், காயமடைந்த மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், மூன்று கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.


700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 2 எஸ்.பி.,க்கள், 4 ஏஎஸ்பிக்கள், 30 டிஎஸ்பிக்கள்,80 இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


latest tamil news


Advertisement


முன்னதாக, ஜல்லிக்கட்டு துவங்கும் முன்னர், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், கலெக்டர் வினய் உறுதிமொழியை வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்று கொண்டனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.


latest tamil newsஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றனர்.


latest tamil news

latest tamil news

சிறந்த மாடுபிடி வீரர்


16 மாடுகளை பிடித்த பொதும்பு சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகவும், 13 காளைகளை பிடித்த ராஜா , 2வது பரிசையும் , 10 காளைகளை பிடித்த கார்த்தி 3 வது பரிசையும் தட்டி சென்றனர். பிரபாகரனுக்கு ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள மாருதி சுஷூகி கார் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சிறந்த காளை வளர்த்தமைக்காக முதல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு லட்சம் மதிப்பு உள்ள காங்கேயம் பசு கன்றுடன் வழங்கப்பட்டது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜன-202019:56:23 IST Report Abuse
kulandhai Kannan இந்த முறையில் விளையாடுவதால் தான் மாடுகளுக்கு காயம் ஏற்படுவதில்லை. மேலும் அந்த ஆக்ரோஷமான காளைகளின் அருகில் செல்வதே வீரம்தான்.
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
16-ஜன-202015:13:01 IST Report Abuse
S.Baliah Seer சில நிமிடங்களுக்கு முன் தான் பாலமேடு ஜல்லிக்கட்டு கூற்றை தொலைக்காட்சியில் பார்த்தேன்.இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்பவர்களை விட பாம்பு பிடிப்பவன் எவ்வளவோ மேல்.அந்த ஆள் 12 மாடுகளை பிடித்தான், இந்த ஆள் 10 மாடுகளை பிடித்தான் என்று ஒலிபெருக்கியில் கமன்ட் வேறு.மாடு ஒடி வரும் வழியை வாடிவாசல் என்கிறார்கள்.அந்த வழியை ஒட்டு மொத்த மாடுபிடி கூட்டமும் அடைத்துக்கொண்டு நிற்கிறார்கள்.இதனால் மாடுகள் மிரண்டு வெளியில் வரவே முடியாத நிலையை உண்டாக்குகிறார்கள். காளை மிகுந்த தயக்கத்துடன் வெளியே வருகையில் அதன் மீது ஒரு கூட்டமே பாய்கிறது. இதனால் இரண்டு அல்லது மூன்றுபேர் அதை பிடித்து தொங்கி வருகையில் ஒரு ஆள் அதன் கொண்டையை தாவி பிடித்து ஒரு சில வினாடிகளில் வீரன் ஆகிறான்.ஒரு ஆள் கூட காளைகளின் எதிரில் தனி ஆளாக வந்து அவற்றின் கொம்பை பிடிக்க முடியாவிட்டாலும் கொண்டையைப் பிடிப்பதில்லை. இதற்குப் பெயர் பாரம்பரிய வீர விளையாட்டாம்.அந்தோ பரிதாபம்.அலுவலகத்தில் சரியாக வேலை பார்க்காதவர்களை திட்டி தீர்க்கும் நாம் வீர விளையாட்டு என்ற பெயரில் நேரத்தை வீணடிக்கும் இந்த கோமாளி கூத்தை கண்டிக்காதது ஏன்?
Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
20-ஜன-202011:38:00 IST Report Abuse
மாயவரத்தான் குறை சொல்லும் நீங்கள் குறைந்தபட்சம் நானும் மாடுபிடிக்கிரேன் என்று அந்த காலத்தில் இறங்க முடியுமா அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ???? சும்மா வாய் சவடால் வீரர் நீங்கள்....
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
16-ஜன-202010:58:16 IST Report Abuse
 Sri,India ஜல்லிக்கட்டு பாரம்பரியமான அவசியமான காளை ,பசு இனத்தை போற்றும் திருவிழா. ஆனால் இந்தப் போட்டியில் கலந்து கொள்பவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும். இரண்டு வருடத்திற்கு அவர்கள் கஞ்சா ,குட்கா , போதை மாத்திரைகள் , டாஸ்மாக் மது இல்லாமல் ரத்த மாதிரி இருந்தால் மட்டுமே அவர்களை போட்டியில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X