பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டு: சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசு

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (10)
Jallikattu,Palamedu,ஜல்லிக்கட்டு,பாலமேடு

இந்த செய்தியை கேட்க

மதுரை: மதுரை அருகேயுள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மாலை 4 மணி வரை நடக்க உள்ளது.





700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 2 எஸ்.பி.,க்கள், 4 ஏஎஸ்பிக்கள், 30 டிஎஸ்பிக்கள்,80 இன்ஸ்பெக்டர்கள் என 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




Advertisement


முன்னதாக, ஜல்லிக்கட்டு துவங்கும் முன்னர், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், கலெக்டர் வினய் உறுதிமொழியை வாசிக்க, அதனை மாடுபிடி வீரர்கள் ஏற்று கொண்டனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.





ஜல்லிக்கட்டை, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவினர் கண்காணித்து வருகின்றனர். அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் ஜல்லிக்கட்டை ரசித்து வருகின்றனர்.












சிறந்த மாடுபிடி வீரர்


16 மாடுகளை பிடித்த பொதும்பு சேர்ந்த பிரபாகரன் சிறந்த மாடுபிடி வீரராகவும், 13 காளைகளை பிடித்த ராஜா , 2வது பரிசையும் , 10 காளைகளை பிடித்த கார்த்தி 3 வது பரிசையும் தட்டி சென்றனர். பிரபாகரனுக்கு ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள மாருதி சுஷூகி கார் வழங்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சிறந்த காளை வளர்த்தமைக்காக முதல் பரிசு வழங்கப்பட்டது. ஒரு லட்சம் மதிப்பு உள்ள காங்கேயம் பசு கன்றுடன் வழங்கப்பட்டது.




Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X