பொது செய்தி

தமிழ்நாடு

'இரவு, பகல் பாராது உழைக்கும் ராணுவ வீரர்களை போற்றுவோம்'

Added : ஜன 16, 2020
Advertisement

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, கடம்பூரில், வறுமை ஒழிப்பு சங்கம், பள்ளி மேலாண் குழு, மகளிர் சுய உதவிக்குழு சார்பில், இந்திய ராணுவ தின விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் பேசியதாவது: இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, 1949 ஜன., 15ல், ஜெனரல் பீல்டு மார்ஷல் கே.எம்.கரியப்பா பதவியேற்ற நாள், ராணுவ தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவர், ராணுவ வாழ்க்கையில், இறுதி மூச்சு வரை, நாட்டுக்கு தன்னலமற்ற சேவை புரிந்தார். இன்று(நேற்று), 72வது ராணுவ தினம் கொண்டாடப்படும் நாளில், நாட்டுக்கு கடமையாற்றி, உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். டில்லியில் ராணுவ அணிவகுப்பு நடக்கும். ராணுவத்தில் பணிபுரிபவர், முன்னாள் ராணுவத்தினருக்கு, அரசு உள்ளிட்ட அனைவர் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படும். இரவு, பகல் பாராது உழைக்கும் நம் ராணுவ வீரர்களை போற்றி மரியாதை செய்திடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X