பொது செய்தி

தமிழ்நாடு

'வரும் 21ல் முதல்வர் முன்னிலையில் 2,000 பேர் அ.தி.மு.க.,வில் இணைவர்'

Added : ஜன 16, 2020
Advertisement

ஆத்தூர்: பூலாம்பாடியிலிருந்து, வீரகனூர் வழியாக, கோவை, சென்னை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தஞ்சாவூர், முசிறி ஆகிய பகுதிகளுக்கு, பஸ் இயக்க விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. அதில், பஸ்கள் இயக்கத்தை தொடங்கிவைத்து, வீரகனூரில் நடந்த விழாவில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில், அதிகளவில் கடன் தள்ளுபடி மட்டுமின்றி, 10 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில், அ.தி.மு.க., ஆட்சியில்தான், அதிகளவில் பாலம் கட்டப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி தேர்தலில், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2021ல், மீண்டும் முதல்வராக பழனிசாமி வர, இத்தேர்தலே சாட்சி. சேலம் மாவட்டத்தில், 18 ஒன்றியங்களில், அ.தி.மு.க., தலைவர்கள் பதவியேற்றுள்ளனர். வரும், 21ல், ஆத்தூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாற்று கட்சியிலிருந்து, 2,000 பேர், முதல்வர் பழனிசாமி முன், அ.தி.மு.க.,வில் இணைவர். இவ்வாறு அவர் பேசினார். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்தூர் சின்னதம்பி, கெங்கவல்லி மருதமுத்து, தலைவாசல் ஒன்றிய செயலர் ராமசாமி, ஆத்தூர் நகர செயலர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X