பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற சுற்றுலா பயணியர்

Added : ஜன 16, 2020
Advertisement

ஏற்காடு: ஏற்காடு, தாவரவியல் பூங்காவில், பொங்கல் விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதை, ஒன்றிய குழு தலைவர் சாந்தவள்ளி அண்ணாதுரை, பா.ஜ., - எஸ்.சி., அணி மாநில செயலர் மதியழகன் தொடங்கிவைத்தனர். சுற்றுலா பயணியர், பூங்கா தொழிலாளர்கள் இணைந்து, பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில், சுற்றுலா பயணியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதல் மூன்று இடங்கள் முறையே, உறியடித்தலில் உதயகார்த்திகா, பிரியங்கா, பாலு; கோலத்தில், நவநீதம், ஜெயசித்ரா, உயிர்ஓவியம்; இசைநாற்காலியில் ரஞ்சனி, பிரேமா, லீலா; சாக்குப்போட்டியில் மைக்கேல், ஹரிகிருஷ்ணன், ஆகாஷ் ஆகியோர் பரிசுகள் பெற்றனர். மேலும், 45வது மலர் கண்காட்சிக்கு, மூன்று லட்சம் பூச்செடி விதைகள் நடவு செய்ய திட்டமிட்ட தோட்டக்கலைத்துறையினர், அதற்கான பணியை தொடங்கினர். முதல்கட்டமாக, 50 ஆயிரம் விதைகளை நடவு செய்தனர். உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், மேலாளர் குணசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
சமத்துவ பொங்கல்: பெத்தநாயக்கன்பாளையத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சமத்துவப்பொங்கல் விழா கொண்டாடினர். தி.மு.க.,வினர் கொங்கணாபுரம், சடையம்பாளையத்தில், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பரமணியம், கட்சி கொடியேற்றி, பெண்களுக்கு சேலைகள், பொங்கல், கரும்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X