பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தைகளில் 3 நாளில் ரூ.100 கோடிக்கு விற்பனை

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக முக்கிய நகரங்களிலுள்ள, 179 உழவர்சந்தைகளில் கடந்த, 13ல் தொடங்கி, நேற்று வரை பொருட்களை வாங்க, மக்கள் கூட்டம் அலைமோதியது. அதில், 13ல், 30 கோடி, 14ல், 33 கோடி, 15ல், 38 கோடி ரூபாய் என, மூன்று நாட்களில், 101 கோடி ரூபாய்க்கு காய்கறி, செங்கரும்பு, மஞ்சள் குலை, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை நடந்தது. அதில், தமிழகத்தில் அதிகமாக, 14 உழவர் சந்தைகள் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று நாளில், 4.25 கோடி ரூபாய், அதற்கடுத்து, 11 உழவர் சந்தைகள் உள்ள சேலம் மாவட்டத்தில், 3.25 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதேபோல், வெளி மார்க்கெட்டில் விற்பனை பல மடங்கு அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X