தமிழ்நாடு

உணவு பாதுகாப்பு அலுவலர் 14 பேர் பணியிடம் காலி: தரமற்ற பொருள் விற்பனையை தடுக்க முடியாத அவலம்

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு அலுவலர், 14 பேர் பணியிடம், ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளதால், கலப்பட, தரமற்ற உணவுப்பொருள் உற்பத்தி, விற்பனையை தடுக்க முடியாத நிலை உள்ளது.
உணவு பாதுகாப்பு அலுவலர்கள், உணவு பொருள் உற்பத்தி, தயாரிப்பு இடம், விற்பனை, குடோன்களில் சோதனையில் ஈடுபட்டு, அதன் தரத்தை கண்டறிவர். சந்தேகம் இருப்பின், பொருள் மாதிரி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் முடிவுப்படி, மேல் நடவடிக்கை தொடரும். தவிர, உணவு பாதுகாப்பு சான்று வழங்குவதோடு, உரிமம் பெற, நியமன அலுவலருக்கு பரிந்துரைத்தல், உணவு போக்குவரத்து வாகனங்களை, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆனால், சேலம் மாவட்டத்தில், தரமற்ற, கலப்பட உணவுப்பொருள்கள் உற்பத்தி, விற்பனை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, கலப்பட, தரமற்ற உணவுப்பொருளுக்கு, 44 லட்சத்து, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட, 30 சதவீதம் அதிகம். இதற்கு, உணவு பாதுகாப்பு அலுவலர்கள், போதிய அளவில் இல்லாமையே காரணம். மாவட்டத்தில், 22 பேர் பணியிடங்களில், எட்டு பேர் மட்டுமே உள்ளனர். சேலம் - அம்மாபேட்டை, கொங்கணாபுரம் - மகுடஞ்சாவடி, காடையாம்பட்டி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி, ஆத்தூர், இடைப்பாடி ஆகிய இடங்களில், உணவு பாதுகாப்பு அலுவலர் பணியிடம், ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளது. கூடுதல் பணிகளை கவனிக்கும் அலுவலர்களால், முழுமையாக பணியில் ஈடுபட முடியவில்லை. அதனால், பெயரளவுக்கு ஆய்வு நடப்பதால், தரமற்ற, கலப்பட உணவு பொருள் உற்பத்தி, விற்பனையை தடுக்க முடியாத நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X