பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பதிவேடு, காசோலை: 4 ஆண்டுக்கு பின் ஒப்படைப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

கொளத்தூர்: நான்காண்டாக கையாண்ட, கணக்கு பதிவேடு, காசோலை புத்தகங்களை, ஊராட்சி செயலர்கள், பி.டி.ஓ.,விடம் ஒப்படைத்தனர்.
ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலம் முடிந்த நிலையில், 2016ல் நடக்கவிருந்த உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனால், தலைவர்கள் கையாண்ட காசோலை புத்தகம், பதிவேடு பராமரிக்கும் பணி, 2016 அக்., 24ல், ஊராட்சி செயலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல், நான்காண்டாக, திட்ட பணி, மின்கட்டணம், குடிநீர் கட்டணத்துக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு, காசோலைகளில், செயலர்களே கையெழுத்திட்டனர். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றனர். செயலர்கள் கையாண்ட பதிவேடு, காசோலை புத்தகங்களை, தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். கொளத்தூரில், 14 ஊராட்சிகள் உள்ளன. அங்கு, செயலர்கள் கையாளும், 7 வகை கணக்கு காசோலை புத்தகங்களை, உடனடியாக, பி.டி.ஓ.,விடம்(கி.ஊ) ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, புதிதாக பதவியேற்ற ஊராட்சி தலைவர்களிடம் ஒப்படைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பணமற்ற பரிவர்த்தனை; விரைவில் நடைமுறை: பணமற்ற பரிவர்த்தனையை, ஊராட்சி நிதி கண்காணிப்பு அமைப்பு மூலம் நடைமுறைப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், காசோலையின்றி திட்டப்பணி, செலவின தொகை, நேரடியாக சம்பந்தப்பட்ட ஒப்பந்த தாரர், அரசு துறை கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஊராட்சி தலைவர்கள் கையெழுத்திட வேண்டிய அவசியம் ஏற்படாது. இதனால், பணமற்ற பரிவர்த்தனை, விரைவில் ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X