பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட அளவில் திறன் பயிற்சி: 2,270 போட்டியாளருக்கு அழைப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: வரும், 20ல் தொடங்கி, மூன்று நாள் நடக்கவுள்ள, திறன் பயிற்சி, 'ஸ்கீரினிங்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, 2,270 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சேலம் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக திறன் போட்டி, 2021ல், சீனா, ஷாங்காய் நகரில் நடக்கவுள்ளது. அதன் முதல் கட்டமாக, மாவட்ட அளவில் திறன் போட்டி நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க, மாவட்டத்தில், 2,270 போட்டியாளர், 47 திறன் பிரிவுகளில் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு, மாவட்ட, மாநில, அடுத்து, அகில இந்திய அளவில், அடுத்தடுத்து போட்டி நடத்தி, தேர்வு செய்து, உலகப்போட்டிக்கு அனுப்பப்படுவர். போட்டிகளில் பங்கேற்க, 25 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, ஊக்கப்படுத்துவதால், போட்டியாளர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. அதனால், மாவட்ட அளவில், 'ஸ்கீரினிங்' தேர்வு, அதற்கான மையங்களில், ஜன., 20, 21, 22ல் நடக்கிறது. பின், 23 முதல், 31 வரை, செய்முறை பயிற்சி தேர்வு, அதே மையங்களில், காலை, 9:00 - 5:00 மணிவரை நடக்கும். விண்ணப்பித்துள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும். தகவலுக்கு, 90438 - 7035, 94990 - 55827 என்ற மொபைல் எண்களில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X