பொது செய்தி

தமிழ்நாடு

மீன்வள உதவியாளர் பணி: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: காலியாக உள்ள, மீன்வள உதவியாளர் ஆறு பேர் பணியிடத்துக்கு, வரும், 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்டத்திலுள்ள, மேட்டூர் அணை மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில், காலியாகவுள்ள மீன்வள உதவியாளரான, ஆறு பணியிடம், இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. தமிழில், எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். நீந்துதல், மீன்பிடித்தல், வலை பின்னுதல், பரிசல் ஓட்டுதல், அறுந்த வலைகளை சரிசெய்ய தெரிந்திருப்பது அவசியம். அத்துடன், மீனவர் பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெற்ற சான்று இருந்தால் முன்னுரிமை உண்டு. இன சுழற்சியில், தகுதியான ஆதரவற்ற விதவை, பெண் விண்ணப்பதாரர் இல்லாதபட்சத்தில், அதே இன சூழற்சி ஒதுக்கீட்டில், ஆண் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர். கல்வி, ரேஷன் கார்டு, வயது நிரூபணம், ஜாதி, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு ஆகியவற்றை, விண்ணப்பத்துடன் இணைத்து, வரும், 27க்குள், 'உதவி இயக்குனர் அலுவலகம், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை, சேலம் மாவட்டம் - 636401' எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகவலுக்கு, 04298 - 244045 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X