சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்து: வாலிபர், முதியவர் பலி

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், வாலிபர், முதியவர் பலியாகினர். சேலம், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்தவர் மெய்யப்பன், 52. இவர், ஹீரோ ?ஹாண்டா ஸ்பிளன்டர் பைக்கில், நேற்று முன்தினம் காலை, 11:45 மணிக்கு, சுக்கம்பட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். சேலம் - அரூர் சாலையில், அடிமலைப்புதூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், புளியமரத்தில் மோதி, மெய்யப்பன் தூக்கி வீசப்பட்டார். அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று காலை இறந்தார். வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர். * வரகாம்பாடியைச் சேர்ந்த, குமார் மகன் வெங்கடேசன், 19. நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு, மீண்டும் ஹீரோ ?ஹாண்டா பைக்கில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். மதியம், 12:30 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உடையாப்பட்டி பைபாஸ் அருகே சென்றபோது, எதிரே வந்த, ஆவின் லாரி மோதியது. அதில், சம்பவ இடத்தில் வெங்கடேசன் பலியானார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X