சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணமான 4 மாதத்தில் பெண் மர்மச்சாவு: பெற்றோர் - உறவினர்கள் போராட்டம்

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: திருமணமான நான்கு மாதத்தில், இறந்த பெண்ணின் உறவினர்கள், சாவில் சந்தேகமிருப்பதாக கூறி, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சித்தேரியைச் சேர்ந்த, செங்கோட்டையன் மகன் பழனிவேல், 30. அவரது காதல் மனைவி ராஜேஸ்வரி, 21. டிப்ளமோ நர்சிங் படித்தவர். வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த இருவரும், நான்கு மாதத்துக்கு முன், திருமணம் செய்து கொண்டனர். மாமியார் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக, அவ்வப்போது, ராஜேஸ்வரி, அவரது பெற்றோர் வீட்டில் தெரிவித்தார். கடந்த, 11ல், அவர் உடல் சுகவீனமாகி, சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 14ல் இறந்தார். பிரேத பரிசோதனைக்கு, பெண் உடல், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள், உடலை வாங்க மறுத்து, மருத்துவமனை முன், நேற்று, போராட்டம் நடத்தினர்.

பெற்றோர் வள்ளியம்மாள், 45, ராமச்சந்திரன், 52, உள்ளிட்ட உறவினர்கள் கூறியதாவது: கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு, சரிவர சாப்பாடு போடாமல், ராஜேஸ்வரியை கொடுமைப்படுத்தினர். அவரை கொல்ல, 'ஸ்லோ பாய்சன்' கொடுத்ததால், உடல் சுகவீனமாகி இறந்துவிட்டார். கணவர், அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைவாசல் போலீசார், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர். போலீசார், சமாதானம் கூறியதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட அவர்கள், உடலை வாங்காமல் சென்றுவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X