சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்ஐ வில்சனை கொன்றது ஏன்? பயங்கரவாதிகள் வாக்குமூலம்!

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (97+ 18)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்ததால், எஸ்.ஐ.வில்சனை சுட்டு கொன்றதாக கர்நாடகாவில் கைதான, சமீம் மற்றும் தபீக் ஆகியோர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வாகன சோதனைச் சாவடியில் ஜன. 8ல் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இரண்டு வாலிபர்கள் தலையில் தொப்பி அணிந்தவாறு தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் போலீசுக்கு கிடைத்தது. அதை ஆய்வு செய்ததில் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் (28) என்பது தெரிந்தது. இரண்டு வாலிபர்களும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன்தினம்(ஜன.,14) கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் இரண்டு வாலிபர்களையும் கர்நாடகா போலீசார் கைது செய்தனர். கைதான வாலிபர்கள் நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட போலீசார் இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதலில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தக்கலை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது சமீம் மற்றும் தவுபிக் ஆகியோர் கியூபிரிவு போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் தொடர்ந்து கைது செய்ததால் எஸ்.ஐ.வில்சனை சுட்டு கொன்றதாகவும், தங்களையும் போலீஸ் சுட்டு கொல்லலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (97+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
17-ஜன-202018:05:58 IST Report Abuse
natarajan s கொலையில் சம்பந்தப்பட்டவர்களின் வாக்குமூலம் எங்கோ இடிக்கிறது, அவர்களது தலைவர்களை கைது செய்த அரசுக்கு எதிராக எதாவது அரசியல் வாதியை சுட்டு எதிர்ப்பை காட்ட வேண்டியதுதானே , அதெற்கு ஏன் ஒரு போலீசை சுட வேண்டும், இதன் பின்னணியில் வேறு எதோ மிக பெரிய சதி உள்ளது அதை கண்டுபிடிக்க வேண்டும், அதனால்தான் இந்த வழக்கை NIA இடம் ஒப்படைக்க முடி செய்துள்ளதாக தெரிகிறது , நிச்சயம், தமிழக போலீசோ , கேரளா போலீசோ, கர்நாடக போலீசோ சிறுபான்மையினருக்கு பயந்து உண்மையை வெளி கொணர மாட்டார்கள் , அதனால் CBI அல்லது NIA விசாரித்தால் ஓரளவிற்கு உண்மை வெளி வரும் .
Rate this:
Share this comment
VELAN S - Chennai,இந்தியா
17-ஜன-202023:23:59 IST Report Abuse
VELAN Sஏங்க , உண்மை வெளிவந்து நாம என்ன செய்ய போறோம் , அவனவன் பொழப்புக்கு ஏதோ பன்றான் , நம்ம பொழப்பை நம்ம பார்க்க வேண்டியதுதான் ....
Rate this:
Share this comment
Cancel
Vanavaasam - Dallas,Fort Worth,யூ.எஸ்.ஏ
16-ஜன-202021:29:09 IST Report Abuse
Vanavaasam களியக்காவிளை போலீஸ் இன்ஸ் வில்சன் ஐ கொன்றது தங்கள் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை அடுத்தது கைது செய்தது தான் காரணம் என்று தீவிரவாதி அப்துல் சமீம் (32), கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் (28) தெரிவித்துள்ளனர் ..
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
16-ஜன-202020:05:19 IST Report Abuse
Muthukrishnan,Ram அவர்களது கையிலுள்ள பத்து விரல்களை மட்டும் வெட்டி எடுக்க வேண்டும். மறைவழி நடக்காதவன் முசல்மானாக இருக்க முடியாது. அந்த மதத்துக்கே கெட்ட பெயர் வாங்கித்தரும் இவர்களை அந்த மதம் வரவேற்குமா?
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
18-ஜன-202012:05:38 IST Report Abuse
Jaya Ramஅவர்களின் மதத்தலைவர்கள் பின்னணியில் தான் இவைகள் நடக்கின்றன அப்புறம் என்ன...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X