சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறப்பிலும் பிரியாத மூத்த தம்பதி

Added : ஜன 16, 2020
Advertisement

மேட்டூர்: உடல்நலக்குறைவால், 87 வயதில், மனைவி இறந்த துக்கம் தாளாமல், 97 வயதில் கணவரும் உயிரிழந்தார்.
மேட்டூர் ஆர்.எஸ்., தேசாய் நகர் அடுத்த, பாரதி நகரைச் சேர்ந்தவர் பச்சமுத்து, 97; மேட்டூர், சேலம் கேம்ப், 'பியட்செல்' நூற்பாலையில் வேலை செய்தவர். அவரது மனைவி குள்ளம்மாள், 87. இவர்களுக்கு, 4 மகள், 3 மகன் உள்ளனர். சமீபகாலமாக, தம்பதியர் மட்டும் பாரதிநகரில் வசித்தனர். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, குள்ளம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலை, நேற்று மதியம் அடக்கம் செய்ய, உறவினர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், மனைவி இறந்த துக்கம் தாளாமல் அழுத பச்சமுத்துவும் நேற்று மதியம் இறந்துவிட்டார். இருவர் உடலையும், மேச்சேரி, அமரத்திலுள்ள, அவர்களது சொந்த நிலத்தில், உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X