சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெரிசலால் பயணியரை 'குறி' வைத்து மொபைலை களவாடியவருக்கு காப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: கூட்ட நெரிசலால் பயணியரை, 'குறி' வைத்து, மொபைல் போன் திருடியவரை, போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட, ஏராளமானோர், சொந்த ஊருக்கு செல்வதால், சேலத்தில், அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, புது, பழைய பஸ் ஸ்டாண்டுகளில், மர்ம கும்பல், மொபைல் போன் திருடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்திய நிலையில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, பழைய பஸ் ஸ்டாண்டில், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியைச் சேர்ந்த ரவி, 55, நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம நபர், ரவியின் மொபைல் போனை பறித்துக்கொண்டு ஓடினார். அப்போது, அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், கோட்டையைச் சேர்ந்த சலீம், 30, என்பதும், அவர் மீது, டவுன் போலீஸ் ஸ்டேஷனில், ஏழு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு மொபைல் போன், 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு செல்வோரை குறி வைத்து, இன்னும் சிலர், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டதாக, சலீம் தெரிவித்தார். இதனால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X