பொது செய்தி

தமிழ்நாடு

அன்னவாசல் மெய்வழி சாலையில் பொங்கல் விழா கோலாகலம்

Added : ஜன 16, 2020
Advertisement

புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே, மெய்வழிச்சாலையில் நடந்த பொங்கல் விழாவில், ஜாதி, மத பேதமின்றி, 7,000த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே, மெய்வழிச்சாலை என்ற கிராமத்தில், 1940ம் ஆண்டில் காதர்பாட்சா என்பவர், புதுக்கோட்டை நகரைப் போல் நேரான தெருக்களை உருவாக்கினார். அவர், புதிதாக, 'மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய் மதம்' என்பதை தோற்றுவித்து, அதில் உறுப்பினர்களையும் சேர்த்தார். விருப்பம் கொண்டவர்கள், ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என மத வேறுபாடு இல்லாமல், 69 ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் மெய் மதத்தில் இணைந்தனர். அவர்கள், மெய்வழிச்சாலையில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு பிறக்கும் ஆண், பெண் குழந்தைகளின் பெயருக்கு முன், சாலை என்பதை சேர்த்து பெயர் வைக்கின்றனர். வேதம் பயின்று முடித்து, இம்மதத்தில் சேர்ந்த ஆண்கள் அனந்தர்கள் என்றும், பெண்கள் அனந்தகிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த ஊருக்குள் வீடுகள், ஐந்தடி உயரமுள்ள சுவர் அமைத்து, கூரை வேயப்பட்ட குடிசைகள் தான். அந்த குடிசைகளுக்கு, கதவுகள் பொருத்த மாட்டார்கள். மெய்வழிச்சாலைக்கு, அரசு சார்பில், மின் இணைப்பு தர முன் வந்த போது, மறுத்து விட்ட இவர்கள், தற்போது, சோலார் மின் விளக்குகள் அமைத்துள்ளனர். அந்த பகுதிகளை மிக சுத்தமாக வைத்திருப்பவர்கள், அது ஒரு புண்ணியபூமி என்றும் குருக்ஷ?த்திரம் என்றும் கூறுகின்றனர். உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், பொங்கல் விழாவில், அனைவரும் மெய்வழிச்சாலையின் மையத்தில் உள்ள பொன்னரங்க தேவாலயம் முன் கூடுகின்றனர். இந்த மக்களின் ஆண்டவராகிய காதர் பாட்சாவின் மகனும், தற்போதைய சபைக்கரசருமான வர்க்கவான், அனைவருக்கும் ஒரே அளவிலான பொங்கல் பானையை கொடுத்து, பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள நீளமான அடுப்பில் எல்லோரும் பொங்கல் வைத்தனர். வரிசையாக, ஒவ்வொரு பானையில் இருந்தும் ஒரு கரண்டி பொங்கலை எடுக்கும் சபைக்கரசர், அனைத்தையும் கலந்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்கினார். இந்த ஆண்டு பொங்கல் விழாவில், 7,000த்துக்கும் மேற்பட்டோர், ஒரே இடத்தில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X