செம்மரக்கட்டை வெட்டி கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செம்மரக்கட்டை வெட்டி கடத்தியவர் கைது

Added : ஜன 16, 2020
Share
திருப்பத்தூர்: ஆந்திரா மாநிலத்தில், செம்மரக்கட்டை வெட்டி கடத்தியர், திருப்பத்தூர் அருகே கைது செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலம், தலகோணா வனப்பகுதி லோட்டினிமடகு பகுதியில், கடந்த, 13ல் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கடத்தியது. ஆந்திரா மாநிலம், திருப்பதி வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இதில், 25 பேர் பிடிபட்டனர். விசாரணையில், கும்பலை அழைத்து வந்தவர், திருப்பத்தூர்

திருப்பத்தூர்: ஆந்திரா மாநிலத்தில், செம்மரக்கட்டை வெட்டி கடத்தியர், திருப்பத்தூர் அருகே கைது செய்யப்பட்டார். ஆந்திரா மாநிலம், தலகோணா வனப்பகுதி லோட்டினிமடகு பகுதியில், கடந்த, 13ல் ஒரு கும்பல் செம்மரம் வெட்டி கடத்தியது. ஆந்திரா மாநிலம், திருப்பதி வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இதில், 25 பேர் பிடிபட்டனர். விசாரணையில், கும்பலை அழைத்து வந்தவர், திருப்பத்தூர் மாவட்டம், செம்பாரையை சேர்ந்த சிவக்குமார், 37, என்பது தெரிந்தது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினர் நேற்று, செம்பாரையில் மறைந்திருந்த சிவக்குமாரை கைது செய்து, ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான, 278 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X