பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தியதற்கு தி.மலை மாவட்டத்துக்கு தேசிய விருது

Added : ஜன 16, 2020
Advertisement

திருவண்ணாமலை: நீர் பாதுகாப்பில், தேசிய அளவில், திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசு, 'ஸ்கோச்' விருது வழங்கி உள்ளதாக, கலெக்டர் கந்தசாமி கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், நிலத்தடி நீர், மழைநீர் சேமிப்பு, நீர் மேம்பாடு குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, மத்திய அரசு, தேசிய அளவிலான 'ஸ்கோச்' விருதை, கடந்த, 11ல், புதுடெல்லியில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, 'ஜல் சக்தி அபியான்' திட்டம் மூலம், மத்திய, மாநில அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால், கடந்த ஆண்டு, 11.2 மீட்டர் ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம், தற்போது, 3.4 மீ., உயர்ந்துள்ளது. தடுப்பணைகள், சிமென்ட் கான்கிரீட் தடுப்பணைகள், நீர்குட்டைகள், நீர்வரத்து கால்வாய்கள், பண்ணை குட்டைகள், தனிநபர் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள், ஏரி கரைகளில் மரம் நடுதல் என, 87.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. குடிமராமத்து திட்டத்தில், 44.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,555 பணிகள் செய்யப்பட்டுள்ளன. 260 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, 672 நீர் நிலைகள் புனரமைக்கப்பட்டன. பானை சொட்டு நீர் பாசனம் முறை விவசாயத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும், 500 மேல்நிலைத் தொட்டியில், நீர் நிரம்பும் போது, வீணாவதை தடுப்பதற்காக தானியங்கி சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயத்தில் நெல் சாகுபடிக்கு, 85 சதவீதம், கரும்பு சாகுபடிக்கு 75 சதவீதம், நீர் தேவையாக உள்ளது. கரும்பு விவசாயத்துக்கு சொட்டுநீர் பாசனம் 100 சதவீதம், மானியமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X