பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் கொண்டாட தடை: மலை கிராம மக்கள் தவிப்பு

Added : ஜன 16, 2020
Advertisement

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, புதூர்நாடு மலை உள்பட இரண்டு பகுதிகளில், ஊர் கட்டுப்பாட்டால் பொங்கல் கொண்டாட முடியாமல் மக்கள் தவித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலையில் புதூர்நாடு உள்ளது. இங்குள்ள கூலித்தொழிலாளி ரகு, 24, கடந்த மாதம் ஊர் கட்டுப்பாட்டை மீறி, வேறு சமுதாய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கு, அவரது உறவினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, அவர் வசிக்கும் பகுதியில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட ஊர் பஞ்சாயத்தார் சார்பில் தடை விதிக்கப்பட்டது. அதே போல, அருகே உள்ள புங்கனூரில், ஊர் கட்டுப்பாட்டை மீறி செம்மரக்கட்டை வெட்ட சிலர், ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு கடந்த வாரம் சென்றனர். இதனால், அங்கும் பொங்கல் கொண்டாட தடை விதிக்கப்பட்டது. ஊர் கட்டுப்பாட்டை மீறி, பொங்கல் கொண்டாடினால், ஒதுக்கி வைப்பார்கள் என்பதால், இப்பகுதி மக்கள் பொங்கல் கொண்டாட முடியாமல் தவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X