பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்தராயண புண்ணிய கால தீர்த்தவாரி

Added : ஜன 16, 2020
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த, 6ல், உத்தராயண புண்ணியகால கொடியேற்றம் நடந்தது. இதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை என இரு வேளையும், விநாயகர், சந்திரசேகரர் வீதி உலா வந்தனர். நேற்று காலை தாமரை குளக்கரையில், விநாயகர், சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து விநாயகர், சந்திரசேகர் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு இடையே ஏற்படும் ஊடலை நினைவு கூறும் வகையில், 'திருவூடல்' உற்சவம், நாளை மறுநாள், 17ல், சுவாமியும், அம்மனும் ஒன்று சேருவதை நினைவு கூறும் வகையில் 'மறுவூடல்' உற்சவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X