பொது செய்தி

தமிழ்நாடு

படுக்கையில் கணவர், புற்றுநோய் பிடியில் மனைவி: குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியான பரிதாபம்

Added : ஜன 16, 2020
Advertisement

சேலம்: படுத்த படுக்கையில் கணவர், தொண்டை புற்றுநோய் பிடியில் மனைவி சிக்கியதால், குழந்தைகளை காப்பாற்ற முடியாத நிலைக்கு, தம்பதியர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை உருவாகியுள்ளது.
சேலம் மாவட்டம், காகாபாளையம், ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் கோபாலகண்ணன், 42. இவரது மனைவி மஞ்சுளா, 31. இவர்களது மகள் சாதனா, 9, மகன் ரோகித், 7. இவர்கள் முறையே, கரட்டுப்பாளையம் அரசு பள்ளியில் நான்கு, இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர். சென்னை, போரூரை சேர்ந்த மஞ்சுளா, துணிக்கடையில் பணிபுரிந்த நிலையில், அதே கடையில் பணியாற்றிய கோபால கண்ணனை காதலித்தார். இதற்கு மஞ்சுளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, சென்னையில் திருமணம் செய்து கொண்ட அவர்கள், ஸ்டாலின் நகரிலுள்ள கோபாலகண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டனர். இதையடுத்து, கட்டட பணியில், 'சென்ட்ரிங்' வேலையில் ஈடுபட்டு வந்த கோபாலகண்ணன், அதன் மூலம் கிடைத்த வருமானத்தால், குடும்பத்தை நடத்தி வந்தார். 2014ல், சேலத்தில் பணியில் ஈடுபட்டபோது, அவரது தலையில் 'பிளைவுட்' விழுந்து அடிபட்டது. அதை கண்டுகொள்ளாமல் விட்டார். ஐந்தாண்டுகளுக்கு பின், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். இதனால், குடும்ப வருவாய் முற்றிலும் தடைபட்டது. வேறு வழியின்றி, அதே பகுதியிலுள்ள பள்ளியில், துப்புரவு பணியாளராக மஞ்சுளா சேர்ந்தார். அதில், மாதம், 1,500 ரூபாய் மட்டும் கிடைக்கும் நிலையில், குடும்பத்தை நடத்த முடியாமல், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார். இந்த நிலையில், தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, மஞ்சுளா வாயால் சாப்பிட முடியாமல், 'டியூப்' மூலம், கூழ் உள்ளிட்ட நீராதாரங்களை மட்டும் அருந்துகிறார். இதுதவிர, மகள் சாதனா, அடிக்கடி வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். அவளை, மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல முடியாமல், மஞ்சுளா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இதுகுறித்து, மஞ்சுளா கூறியதாவது: காதல் திருமணம் செய்ததால், என் குடும்பம் கைவிட்டது. கணவர் காப்பாற்றி வந்த நிலையில், அவருக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சை பெற்றோம். மூன்று வேளை மருந்து, மாத்திரை சாப்பிட்ட அவருக்கு, தற்போது ஆறு வேளையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வறுமையால், தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. எனக்கும் புற்றுநோய் தாக்கம் உள்ளதால், என் இறப்புக்கு பின், குழந்தைகளை யார் கவனிப்பர் என்பது தான், ஒரே கவலையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நோய் ஒரு புறம், வறுமை மறுபுறம் என வாட்டுவதால், குழந்தைகளின் கல்வி, அவர்களது எதிர்காலம் என்பது மிகவும் கேள்விக்குறியாகியுள்ளது. அதனால், அந்த குடும்பத்துக்கு உதவ நினைப்பவர்கள், மஞ்சுளாவின், 77082 99913 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X