பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் கொண்டாடிய முதல்வர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பொங்கல் கொண்டாடிய முதல்வர்

Added : ஜன 16, 2020
Share
இடைப்பாடி: தமிழக முதல்வர், சொந்த ஊரில், மக்களுக்கு இனிப்பு வழங்கி, பொங்கல் விழாவை கொண்டாடினார்.சேலம் மாவட்டம் வந்துள்ள, முதல்வர் பழனிசாமி, தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், மனைவி ராதா, மகன் மிதுன்குமார் உள்ளிட்டோருடன், நேற்று பொங்கல் விழாவை கொண்டாடினார். குடும்பத்தினர் வைத்த பொங்கலை, மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு சொந்தமான முருகன் கோவிலில்

இடைப்பாடி: தமிழக முதல்வர், சொந்த ஊரில், மக்களுக்கு இனிப்பு வழங்கி, பொங்கல் விழாவை கொண்டாடினார்.
சேலம் மாவட்டம் வந்துள்ள, முதல்வர் பழனிசாமி, தன் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், மனைவி ராதா, மகன் மிதுன்குமார் உள்ளிட்டோருடன், நேற்று பொங்கல் விழாவை கொண்டாடினார். குடும்பத்தினர் வைத்த பொங்கலை, மக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து, அவரது குடும்பத்துக்கு சொந்தமான முருகன் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அப்போது, அங்கிருந்த பசுக்களுக்கு பழங்களை வழங்கினார். பின், சட்டி உடைக்கும் போட்டியில் பங்கேற்று, மக்களை மகிழ்வித்தார். இதையடுத்து, அங்கு நடந்த கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம் உள்ளிட்ட கிராம நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். ஏராளமான மக்கள், முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின், முதல்வர் பழனிசாமி, மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X